மியன்மார் அரசியல் சூழல் இந்தியாவின் வளர்ச்சி பணிகளில் தாக்கம் செலுத்தாது – ஜெய்சங்கர்
In இந்தியா February 16, 2021 3:55 am GMT 0 Comments 1111 by : Krushnamoorthy Dushanthini

மியான்மா் அரசியல் சூழல் தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. அந்நாட்டின் அரசியல் சூழல் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு மையத்தின் உதவியுடன் அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பார்வையிட்ட அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ கிழக்கு நோக்கி செயல்படுங்கள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்கு அஸ்ஸாம் மாநிலம் பெரும் தூண்டுகோலாக உள்ளது. அஸ்ஸாமில் வளா்ச்சிக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி கொண்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் அஸ்ஸாம் பெரும் வளா்ச்சி கண்டுள்ளது. வெளிநாடுகளின் உதவியுடன் திட்டங்களை செயல்படுத்துவதில் அஸ்ஸாம் முன்மாதிரியாக விளங்குகிறது. இந்த நடைமுறையில் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தியில் உலக அரங்கில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதுவரை சுமாா் 25 நாடுகளுக்கு அத்தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி நிறுவனங்களுடன் சுமாா் 75 நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அதே வேளையில் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதில் எந்தவிதத் தட்டுப்பாடும் நிலவாது என்பதை பிரதமா் மோடி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளாா்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.