மியன்மார் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை பின்வாங்க மாட்டோம்: பிரித்தானியா
In இங்கிலாந்து September 5, 2018 7:40 am GMT 0 Comments 1439 by : krishan
மியான்மாரில் மனிதாபிமான குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் நீதிக்கு முன்னிறுத்தப்படும் வரை தாம் பின்வாங்கப் போவதில்லை என பிரித்தானிய வௌிவிவகார செயலாளர் ஜெரமி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் நேரத்தின் போது மியன்மார் தொடர்பாக கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தொிவித்த அவர், “இன அழிப்புகள் எந்த வடிவத்தில், எங்கு நடைபெற்றிருந்தாலும் அவை நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் ஒருபோதும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கக் கூடாது.
இந்த பயங்கர குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் நீதியின் முன்னிறுத்தப்பட வேண்டும். மியன்மார் குறித்த ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தலைவர் என்ற ரீதியில் இதனை நிறைவேற்றுவதில் பிரித்தானியாவிற்கு பாாிய பங்குண்டு.
அதன்படி, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுக் கூட்டத்தின்போது, மியன்மார் விடயம் தொடர்பாக அமைச்சர்களின் உயர்மட்ட கூட்டமொன்றை கூட்ட நான் எதிர்பார்த்துள்ளேன்.
குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படும்வரை இந்நடவடிக்கைகளிலிருந்து நாம் பின்வாங்க மாட்டோம்.
இந்த சூழ்நிலையில் நாம் இரண்டு விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றோம். முதலாவது விடயம் ரோஹிங்கியா மக்களை பாதுகாப்பாக நாட்டுக்கு வரவழைத்தல். எல்லையற்ற மனிதாபிமான நிலைமையின் காரணமாக இது மிகவும் முக்கியமானதாகும்.
இரண்டாவது, குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதை உறுதிபடுத்தல். இது சற்று கடினமான விடயம் என்ற போதிலும், அதனை ஈடுபாட்டுடன் நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” எனத் தொிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.