மிரட்டும் இந்தியாவிடம் பதுங்கிப் பாயுமா இலங்கை?

இலங்கையில் நடைபெற்றுவரும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதுவரையிலும் 4 போட்டிகளில் 3 வெற்றி 1 தோல்வி அடங்களாக 6 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
மற்றொரு பக்கம் இந்திய அணியில் இந்த வெற்றி இலங்கை அணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் தலா இரண்டு புள்ளிகளைப் பெற்று சமநிலையில் உள்ளன.
அதன்படி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் களம் காணப்போவது இலங்கையா அல்லது பங்களாதேசா என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதில் வெற்றிபெறும் அணி இந்தியாவுடன் எதிர்வரும் 18ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டியில் பலப்பரீட்சையில் ஈடுபடும்.
இலங்கையின் கௌரவம் மிக்க தொடரான இந்த சுதந்திரக்கிண்ணத்தைக் கைப்பற்றும் குறிக்கோளோடு இலங்கையும், எதிர் முனையில் ஏற்கனவே இலங்கையை தும்சம் செய்த பங்களாதேஷ் அணியும் மோதிக்கொள்ளவுள்ள நாளைய அரையிறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேபோன்று அண்மைக்காலமாக தொடர்ந்தும் வெற்றி பெற்றுவரும் இந்தியாவிற்கும் இந்தத் தொடரில் வெற்றி பெறவேண்டியது முக்கியமாகும் எனவே இந்தியாவும் ஆக்ரோஷமாக விளையாடும் என்பது நிச்சயம். என்றாலும் இலங்கையும் தற்போது பலம் வாய்ந்த அணியாக உள்ளது என்பது இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது காட்டுகின்றது.
எனவே பதுங்கிய இலங்கை பங்களாதேசிடம் பாய்ந்து வெற்றி பெற்று இந்தியாவுடன் மோதி, இலங்கையின் கௌரவத்தை இலங்கையே தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது ஏற்கனவே தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவது போன்று இத்தொடரையும் விட்டுக்கொடுக்குமா என்பது நாளை தெரியவரும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.