மிருகவதை தடை சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

மிருகவதை தடை சட்டம் மிக தீவிரமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஆறு லொறிகளில் 84 மாடுகளை நெருக்கமாக கட்டி ஏற்றிச்சென்ற வழக்கில், முகமது சபேக் உள்ளிட்ட 17 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டிப்பட்டிருந்தவர்களின் 54 மாடுகளை விற்று, அரசுக்கு அந்த தொகையை செலுத்த ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து ஷபேக் உள்ளிட்ட ஆறுபேர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி முரளிதரன், மிருகவதை தடை சட்டம் மத்திய மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றில், விலங்குகளை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என விதிகள் உள்ளதாக கூறினார்.
அத்தோடு, இந்த சட்டம் வெறும் காகிதமாக இல்லாமல், கடுமையாக அமுல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இது போன்ற வழக்குகளை சரியாக கையாண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கும் வகையில், அனைத்து கீழ்மை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.