மீண்டும் இந்தியா அணிக்காக விளையாட விரும்பும் வருண் ஆரோன்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன், மீண்டும் இந்திய அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். ரி-20 தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் வருண் ஆரோன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், நான்கு ஓவர்கள் வீசி 20 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்ததோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த வருண் ஆரோன், ”எல்லாமே சிறப்பாக உள்ளது. நான் எப்போதுமே என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த போட்டிக்கு முந்தைய போட்டியில் ஒரு ஓவர்தான் வீசினேன். அதில் நான் தவறு ஏதும் செய்ததாக உணரவில்லை.
எப்போதுமே சிறந்ததாகவே உணர்கிறேன். நான் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதே எனது விருப்பம்” என கூறினார்.
இதுவரை, இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வருண் ஆரோன், இறுதியாக 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.