4ஆவது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி! – நீதிமன்றம் தீர்ப்பு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பீஹார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத், மற்றுமொரு வழக்கில் குற்றவாளியென சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தும்சா கருவூலத்தில் இருந்து ரூ. 3.13 கோடி ஊழல் மோசடி செய்தமை தொடர்பான 4ஆவது வழக்கின் தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்போது, லாலு பிரசாத் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கால்நடை தீவன முறைகேட்டில் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. முதல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2ஆவது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3ஆவது வழக்கில் 15 ஆண்டுகளும் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
ராஞ்சி சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத், தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.