மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள வைத்தியர் ஷாபி
In இலங்கை January 16, 2020 10:50 am GMT 0 Comments 3307 by : Dhackshala
குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியராக கடமையாற்றிய ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கில் பயங்கரவாதி சஹ்ரானின் பெயரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கருத்தடை விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தாய்மார்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாணக, சந்தேகநபரான ஷாபி, லாபிர் எனும் சந்தேகநபருடன் தோன்றும் ஒளிப்படத்துடன் கூடிய இறுவெட்டொன்று சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்த லாபிர் எனும் நபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் சத்தியப்பிரமாணம் செய்தவர். அது குறித்து எந்த விசாரணையும் இல்லை. அந்த பின்னணியில் பங்கரவாத தடைச் சட்டம் ஷாபி விடயத்தில் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கு வைத்தியர் ஷாபியின் சட்டதரணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். ஜனாதிபதி சட்டத்தரணி நவரட்ன பண்டார இது கருத்தடை விவகாரம் குறித்த தாய்மார்களின் வழக்கு. பாதிக்கப்பட்டோர் தாய்மாரா? சஹ்ரானா? என கேள்வி எழுப்பினார்.
கடும் தொனியில் ஒரே நேரத்தில் இக்கருத்துக்கள் பரிமாறப்பட்ட நிலையில், நீதிமன்றில் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.