மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி!
In இந்தியா February 19, 2021 5:29 am GMT 0 Comments 1166 by : Krushnamoorthy Dushanthini

பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக மார்ச் மாதம் முதலாம் திகதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகைத்தரவுள்ளார்.
தமிழக வருகையின்போது பல்வேறு திட்டங்களைத் ஆரம்பித்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
தொடர்ந்து அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த 14ஆம் திகதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.