மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர் பிரான்ஸ் பிரஜைகள்!

சீனாவிலுள்ள பிரான்ஸ் பிரஜைகள் சிலர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் வுகான் மாநிலத்தில் உள்ள பிரான்ஸ் பிரஜைகள் சிலரே நாளை(ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு அழைத்து வரப்படவுள்ளனர்.
பிரான்ஸ் சுகாதார அமைச்சர் Agnès Buzyn இதுகுறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் வுகான் மாநிலத்தில் இருந்து நாடு திரும்பிய 260 பேரும் 14 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், நாளை 38 பிரான்ஸ் பிரஜைகள் நாடு திரும்பவுள்ளனர்.
பிரித்தானியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்றில் இவர்கள் அழைத்துவரப்படவுள்ளனர்.
குறித்த அனைவரும் முந்தைய நபர்களுடன் இணைந்து தங்கவைக்கப்படாமல் Aix-en-Provence நகரில் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.
எதிர்பார்த்ததன் படி, அவர்களும் 14 நாட்கள் அங்கு தடுத்து வைக்கப்படவுள்ளதாகவும் பிரான்ஸ் சுகாதார அமைச்சர் Agnès Buzyn தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக பிரான்ஸிற்கு வரும் பிரான்ஸ் பிரஜைகள் 48 மணிநேர கட்டுப்பாட்டின் பின்னர் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான திரையரங்கு, விளையாட்டு மைதானம், தேநீர் விடுதிகள், உணவகங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.