மீண்டும் பணிக்கு திரும்பினார் ஈரானுக்கான பிரித்தானியத் தூதுவர்!
In இங்கிலாந்து February 8, 2020 5:25 am GMT 0 Comments 2688 by : Benitlas

ஈரானில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ஈரானுக்கான பிரித்தானியத் தூதுவர் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.
ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர், சில மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது சர்வதேச அரசியல் அரங்கில் பல்வேறு அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்ததுடன், பல்வேறு சர்வதேச நாடுகளும் கண்டனம் வெளியிட்டிருந்தன.
அமெரிக்கப் போர் விமானம் எனக் கருதி உக்ரேனிய பயணிகள் விமானம் ஒன்றை ஈரான் சுட்டுவீழ்த்தியதை அடுத்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்தப் போராட்டத்தின் போது, ஈரானுக்கான பிரித்தானிய தூதுவரும் பங்கேற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.