முகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு லைக்: முன்னாள் போராளியிடம் விசாரணை

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை குறித்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரால் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டவாறு அவர் நேற்று, நான்காம் மாடிக்குச் சென்றிருந்தார். அவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தினர்.
தங்களுடன் நெருக்கமானவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டீர்கள் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்ததாக முன்னாள் போராளி கூறியுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.