முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திவிட்டு சாரதியை தாக்கிய விசமிகள்

முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திவிட்டு அதன் சாரதியை தாக்கிய சம்பவம் ஒன்று வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, வவுனியா நகர தரிப்பிடத்தில் நின்றிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திய நபர் ஒருவர் பல இடங்களுக்கு சென்றதுடன், மேலும் ஒரு நபரையும் அழைத்துக்கொண்டு பூந்தோட்டம் அகத்தியர் வீதியால் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் வைத்து முச்சக்கர வண்டியின் சாரதியின் தொலைபேசியை வாங்கிய அவர்கள், அதனை உடைத்துள்ளதுடன், சாரதியையும் தாக்கியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த சாரதி முச்சக்கர வண்டியை அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பிச்சென்றதுடன், வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் முச்சக்கர வண்டியை அதன் சாரதியிடம் கையளித்ததுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.