News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • காங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தயாரா? – வட.மாகாணசபை உறுப்பினர்கள் கேள்வி!

முதலமைச்சர் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தயாரா? – வட.மாகாணசபை உறுப்பினர்கள் கேள்வி!

In இலங்கை     March 27, 2018 4:20 pm GMT     0 Comments     1565     by : Ravivarman

வட.மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் எடுக்கவில்லை என வட.மாகாணசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வட.மாகாணசபையின் 119ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் வாய்மொழி வினா ஒன்றை எழுப்பியிருந்தார்.

அதில் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களைப் பதவி நீக்கிய முதலமைச்சர் அவர்கள் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க எடுத்துள்ள மேலதிக நடவடிக்கை என்ன எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அமைச்சர் சபையை மாற்றுவதற்காகவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அமைச்சர் சபை மாற்றப்பட்டுள்ளதால் மேலதிக நடவடிக்கை தேவையற்றது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக சபையில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், ‘எங்களை குற்றஞ்சாட்டி குற்றவாளிகளாக்கி வெளியில் விட்டவர்கள் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

மக்களுடைய பணம் ஒரு ரூபாய் கூட களவாடாமல், எனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் தண்டணை அனுபவிக்க நான் தயாராக இல்லை. எனவே எந்த விசாரணைக்கும் நான் தயார்.

முதலமைச்சர் நியமித்த விசாரணை குழுவே என்னை குற்றமற்றவன் எனவும் என்னுடைய செயற்பாட்டுக்கு மாகாணசபை ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள நிலையில் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். ஆகவே அக்குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும்’ எனச் சபையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரபாகரனின் வழியினையே நானும் பின்பற்றுகின்றேன்: சி.வி.விக்னேஸ்வரன்  

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வழியினையே பின்பற்றுவதுடன், கடந்தகாலத் தவறுகளை எண்ணி எத

  • சபரிமலை விவகாரம்: கேரள முதல்வருக்கு ஆதரவான கருத்தால் சர்ச்சை  

    சபரிமலை விவகாரம் குறித்த நடிகர் விஜய் சேதுபதியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “சபரிம

  • சிங்களமயமாகும் வவுனியா; மௌனம் காக்கும் தமிழ் தலைமைகள் – தவராசா குற்றச்சாட்டு!  

    வவுனியாவிலுள்ள பல கிராமங்கள் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், எனினும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த விட

  • வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?  

    வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய்

  • தேர்தலை கருத்திற்கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: தவராசா சூளுரை!  

    நாட்டில் இடம்பெறும் நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாண சபை தேர்தலிலோ போட்டியிடுவது தொடர்பாக எந்தவிதமா


#Tags

  • C.V Vigneshvaran
  • Council of the Northern Province
  • சி.தவராசா
  • சீ.வி.விக்னேஷ்வரன்
  • பா.சத்தியலிங்கம்
  • முதலமைச்சர்
    பிந்திய செய்திகள்
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
    பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
  • தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
    தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
  • அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
    அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
  • ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
    ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.