முதல் டோஸ் ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசியை உட்செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், தனது முதல் டோஸ் ஃபைசர் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளார்.
அமெரிக்கர்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது என்பதைக் காண்பிப்பதற்காக அவர் தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பிடனுக்கு கொரோனா தடுப்புக்கான ஃபைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது.
முன்னதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பட்டியலில் தற்போது ஜோ பைடன், இணைந்துள்ளார்.
ஜோ பிடனின் மனைவி ஜில் பைடன் தனது முதல் டோஸை முந்தைய நாளில் பெற்றார்.
மேலும், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக் எம்ஹாஃப் ஆகியோர் அடுத்த வாரம் தனது முதல் டோஸ் ஃபைசர் கொவிட் -19 தடுப்பூசியைப் பெறுவார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.