முதல் வெற்றியைப் பதிவு செய்தார் சிந்து!
In விளையாட்டு March 15, 2018 5:08 am GMT 0 Comments 1311 by : Puvanes

உலகின் பழைமை வாய்ந்ததும், புகழ் பெற்றதுமான all-england பட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) இங்கிலாந்து – பர்மிங்காம் நகரில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சிந்து தாய்லாந்து வீராங்கனையான போர்ன்பவீ சோச்சுவோங்குடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டார்.
ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பாரதத்தின் நம்பிக்கைக்குரிய வீராங்கனையான சிந்து முதல் செட்டை 20-22 என்ற கணக்கில் விட்டுக்கொடுத்தார்.
எனினும் அடுத்து அதிரடியாக ஆட ஆரம்பித்த சிந்து தொடந்து இரு செட்களையும் தன்வசப்படுத்தினார். அதன்படி 20-22, 21-17, 21-9 என்ற செட் கணக்கில் சோச்சுவோங்கை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.