முதல் வெற்றி யாருக்கு? இந்தியா- விண்டிஸ் அணிகள் மோதல்

இந்தியா மற்றும் விண்டிஸ் அணிகளுக்கிடையிலான ரி-20 தொடரின், முதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா அணிக்கு ரோஹித் சர்மாவும், விண்டிஸ் அணிக்கு கார்லோஸ் பிரத்வெயிட்டும் தலைமை தாங்குகின்றனர்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது போல் ரி-20 தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்தியா உள்ளது. மறுபுறத்தில் ரி-20 தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் விண்டிஸ் அணி, உள்ளது.
இந்திய அணியை பொறுத்த வரை விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னணி வீரரான டோனி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதவிர தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விண்டிஸ் அணியில் லீவிஸ், ரஸ்சல், டேரன் பிராவோ, பொல்லார்ட் போன்ற சிறந்த வீரர்களும், அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ரி-20 போட்டியை பொறுத்த வரை இரண்டு அணிகளுமே பலம் பொருந்திய அணிகளாகவே பார்க்கப்படுகின்றது. ஆகையால் இப்போட்டி இரசிகர்களுக்கு பெரும் விறுவிறுப்பை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.