முனிஷ்காந்த், தேன்மொழி திருமணம்
In சினிமா March 26, 2018 6:49 am GMT 0 Comments 1861 by : Velauthapillai Kapilan

‘முண்டாசுப்பட்டி’ திரைப்படம் மூலம் அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர் முனிஷ்காந்த். இவர் இன்று (திங்கட்கிழமை) திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இவருடைய இயற்பெயர் ராம்தாஸ். ஆனால் இவரை முனிஷ்காந்த் என்று கூறினாலே அனைவரும் அடையாளம் கண்டுகொள்வார்கள்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்த இவர் முண்டாசுப்பட்டி, மாநகரம், பசங்க 2 என பல படங்களில் அதிகமாக பேசப்பட்டார்.
இந்நிலையில் தேன்மொழி என்ற பெண்ணை மணமுடித்த ராம்தாஸிற்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 1961 ஆண்டு 26ஆம் திகதி பிறந்த முனிஷ்காந்தின் வயது தற்போது 56 ஆகும். இவர் இதுவரை 36க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.