முன்களப் பணியாளர்களில் 80-85 % பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – ஹர்ஷ்வர்தன்
In இந்தியா February 15, 2021 12:19 pm GMT 0 Comments 1138 by : Jeyachandran Vithushan

முன்களப் பணியாளர்களில் 80 முதல் 85 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துபோட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.
இந்தியாவில் 188 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றாலும், வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என ஹர்ஷ்வர்தன் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.