முன்னாள் பிரான்ஸ் பிரதமர் பிரான்ஸ்சுவா பியோங் மீது மோசடி வழக்கு

முன்னாள் பிரான்ஸ் பிரதமர் பிரான்ஸ்சுவா பியோங் நிதி மோசடி வழக்கினைச் சந்திக்கவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் பிரான்ஸ்சுவா பியோங் மீதும் அவரது மனைவி பெனிலோப் பியோங் மீதும் வழக்கு விசாரணையை மேற்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பிரான்ஸ்சுவா பியோங்கின் மனைவி பெனிலோப் நாடாளுமன்ற உதவியாளர் என்ற பெயரில் சம்பளம் பெற்றார் என்றும் உண்மையில் அவருக்கு நாடாளுமன்றுக்குள் செல்வதற்கான அனுமதிபத்திரம் இருக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
2017 ஜனவரி இல் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான இருந்த பிரான்ஸ்சுவா பியோங் முதல் மூன்று மாதங்களில் கருத்துக் கணிப்பில் முன்னணியில் இருந்தார். ஆயினும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் அவரது செல்வாக்கு மக்கள் மத்தியில் சரிந்தது.
பிரான்ஸ்சுவா பியோங் மற்றும் அவரது மனைவி பெனிலோப் பியோங் மீதான விசாரணைகள் இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.