முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில், முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முருகனுக்கு அழகு, திறமை, அறிவு என பல பெயர்கள் உள்ளதுபோல், தமிழ் கடவுள் என அழைப்பதை எவ்வாறு அரசிதழில் வெளியிட முடியும், என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக்கள் வசித்து வரும் சூழலில், இதுபோல் அறிவிப்பது இயலாதது என தெரிவித்த நீதிபதிகள், தேசத்தின் மதச்சார்பின்மையை பாதிக்கும் என்பதால், அரசிதழில் வெளியிட உத்தரவிட முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.