முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது
In இலங்கை February 24, 2021 7:22 am GMT 0 Comments 1315 by : Jeyachandran Vithushan

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (புதன்கிழமை) சந்திக்க உள்ளார்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்போது பாகிஸ்தான் பிரதமருடன் பயனளிக்கும் கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான் கானுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர்.
எவ்வாறிருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பு, பாதுகாப்பு நிமித்தங்கள் காரணமாக இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.