பிரசாரத்தின்போது 16000 கிராமசபை கூட்டங்களை நடத்த ஸ்டாலின் திட்டம்
In இந்தியா December 20, 2020 7:28 am GMT 0 Comments 1370 by : Dhackshala

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின்போது 16000 கிராமசபை கூட்டங்களை நடத்த விரும்புவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது.
இக்கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட, மாநகர செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டம் முடிந்ததும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் ஏராளமான தொண்டர்கள் அண்ணா அறிவாலய வளாகத்தில் குவித்துள்ளனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், திமுக ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
டிசம்பர் 23ம் திகதியில் இருந்து மு.க.ஸ்டாலின் நேரடி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும், இந்த பிரசாரத்தின்போது 16000 கிராமசபை கூட்டங்களையும் நடத்த விரும்புவதாகவும் துரைமுருகன் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.