மூடுபனியால் வாகனங்கள் மோதல் – 6 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் வீதிகளில் மூடுபனி அதிகரித்தன் காரணத்தால் ஏற்பட்ட வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
வடமாநிலங்களில் காற்றுமாசு அதிகரித்துவரும் நிலையில், கடுமையான மூடுபனியும் அடர்ந்து காணப்படுகின்றது. இதனால் காலை வேளைகளில் வீதிகளில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாதளவில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசமாநிலம் சம்பால் மாவட்டத்தில் மூடுபனி படர்ந்த வீதியில் சென்றுகொண்டிருந்த பேருந்தொன்று மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் குன்னார் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.