குழந்தை உட்பட மூன்று உயிர்களைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கான காரணம் வெளியாகியது
In இலங்கை January 6, 2021 3:26 am GMT 0 Comments 1496 by : Dhackshala

கண்டி – பூவெலிகட பகுதியிலுள்ள ஐந்து மாடி கட்டடமொன்று தாழிறங்கியமை தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த கட்டடம் உரிய தரத்தில் அமைக்கப்படாமையே இந்த அனர்த்தத்திற்கான காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
மேலும் நிலத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி கண்டி – பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக குறித்த கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டிருந்தார் என்பதுடன், தொடர்ச்சியாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.