மூன்று சர்வதேச நீதிபதிகள் இலங்கைக்கு வருகை

மூன்று சர்வதேச நீதிபதிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லத்தீன் அமரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று நீதிபதிகளே இதன்போது இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அமர்வு ஒன்றில் பங்கேற்கும் வகையிலேயே அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது அவர்கள், தமது நாடுகளின் அரசியலமைப்பு சபைகள் தொடர்பான கருத்துக்களை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இலங்கையின் முக்கிய சில அரசியல் பிரமுகர்களையும் இவர்கள் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இலங்;கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த சர்தேச நீதிபதிகளினதும் இலங்கைக்கான விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.