மெக்ஸிகோ எல்லை மூடல்: ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல்

தெற்கு எல்லை பகுதியை மூடப்போவதாகவும், மேலதிக ஆயத படையினரை நிலைநிறுத்த போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு மெக்ஸிகோ நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் நேற்று (புதன்கிழமை) அறிவுறுத்தியுள்ளார்.
சுமார் 20 ஆயிரம் பேர் மெக்ஸிகோ ஊடாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தடுப்பதற்கு மெக்ஸிகோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றேல் தெற்கு எல்லையை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.
எல்லையில் ஏற்கனவே ஆயுதமேந்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.