மெரினா கடற்கரை நாளை முதல் திறப்பு- கட்டுப்பாடுகளுடன் மக்களுக்கு அனுமதி
In இந்தியா December 13, 2020 9:10 am GMT 0 Comments 1376 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மக்கள் செல்வதற்கு முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த மெரினா கடற்கரை நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது.
கொரோனா பேரிடர் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட மெரினா கடற்கரை, உயர் நீதிமன்றத்தின் கடும் அழுத்தம் காரணமாக நாளை முதல் திறக்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருகைதர வேண்டியது மிகவும் அவசியமெனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
அதனைத் தொடர்ந்து, ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் பல மாதங்கள் ஆகியும் மெரினா கடற்கரையை மட்டும் திறக்காமல் அரசு காலம் தாழ்த்தியது.
இதுகுறித்து உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. அரசு திறக்காவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என எச்சரித்தது.
இதையடுத்து கடந்த மாதம் ஊரடங்கு தளர்வின்போது மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதியன்று மெரினா கடற்கரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாளை மெரினா கடற்கரையைத் திறக்க உள்ளதால் கடற்கரையில் போடப்பட்டிருந்த பொலிஸாரின் தடுப்புவேலிகள் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.