மெல்பேர்னில் பயங்கரவாதத்தாக்குதல் : தாக்குதலாளி சுட்டுக்கொல்லப்பட்டார்
In அவுஸ்ரேலியா November 9, 2018 11:03 am GMT 0 Comments 1611 by : krishan
அவுஸ்ரேலியாவின் மத்திய மெல்பேர்ன் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
பயங்கரவாத சந்தேகநபர் வாகனங்கள் மீது தனது வாகனத்தால் மோதியதுடன் அருகாமையில் நின்ற மக்கள்மீதும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என்று மெல்பேர்ன் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதியை பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மடக்கிப்பிடித்தனர். எனினும் தாக்குதலாளி உயிரிழந்ததாக பிந்திக்கிடைத்தக் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்டநபர் சோமாலியாவைப் பூர்வீகமாகக்கொண்டவர் என்று பொலிஸ்தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.