மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டாம்: பிரதமரிடம் பழனிசாமி கோரிக்கை
In இந்தியா October 8, 2018 9:37 am GMT 0 Comments 1436 by : Ravivarman

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
பிரமதருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
“கர்நாடக அரசின் மேகதாது நீர்த்தேக்கத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். மேகதாதுவில் அணை கட்டப்படுவதால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் தெளிவாக பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளேன். அவரிடமிருந்து விரைவில் சாதகமான பதிலை எதிர்பார்க்க முடியும்.
அத்துடன், தமிழகத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நிலை குறித்து பிரதமரிடம் விளக்கி தமிழகத்துக்கு தேவையான நிதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளேன்.
குமரி மாவட்டத்தில் நிரந்தர கடற்படை தளம், சேலத்தில் இராணுவ தளபாட உற்பத்தி தொழிற்சாலை என்பன அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.