மேடைகளில் நடனமாடுவதை விரும்பும் ஐரோப்பிய தலைவர்கள்!
In இங்கிலாந்து October 9, 2018 5:13 am GMT 0 Comments 1501 by : Varshini
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயைப் போல, ஐரோப்பிய ஒன்றிய தலைவரும் மேடையில் நடனமாடியுள்ளமை சுவாரஷ்யம்மிக்க சம்பவமாக பதிவாகியுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மாநாடொன்றில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் மேடைக்கு அழைக்கப்பட்டார்.
மேடையில் அவர் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பின்னணியில் மென்மையான இசை ஒலித்துக்கொண்டிருந்தது. இதன்போது, தனது உரை அடங்கிய காகிதத்தை பார்த்துவிட்டு, சில நொடிகள் நடன அசைவை மேடையில் நிழ்த்தினார்.
குறித்த நடனத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மத்தியில் பலத்த சிரிப்பொலி வெளிப்பட்டது. அதனை மதிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவரும் சிரிப்பை உதிர்ந்தார்.
அண்மையில் தென்னாபிரிக்காவிற்குச் சென்றிருந்த பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, அங்கு பாடசாலை சிறுவர்களுடன் நடனமாடியமை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதுமட்டுமன்றி கடந்த வாரம் நடைபெற்ற கொன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டின் போதும், மேடையில் சில நிமிடங்கள் நடன அசைவை வெளிப்படுத்தினார். இதனை, அனைவரும் எழும்பி நின்று கைதட்டி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் நடனத்தை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் கேலி செய்கின்றாரா என டுவிட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அவரது பேச்சாளர், அவர் யாரையும் கேலி செய்யவில்லையென்றும், பிரித்தானிய பிரதமர் மீது ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
”இவ்வுலகில் பாட்டும் நடனமும் இல்லாவிட்டால் வாழக்கை எவ்வாறு இருக்கும்?” என்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவரின் பேச்சாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.