‘மேன் வர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் காயம்?- சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்
In இந்தியா January 29, 2020 4:25 am GMT 0 Comments 2035 by : Yuganthini
டிஸ்கவரி சேனல் வழங்கும் மேன் வர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நடிகர் ரஜினிகாந்த் காயமடைந்ததாக வந்த தகவலை தொடர்ந்து அவர் சென்னை திரும்பியுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ்ப்பெற்ற டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸுடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்த அந்நிகழ்ச்ச்சியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பியர் கிரில்ஸுடன் ஏற்கெனவே பங்குபற்றியுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினிக்கு இந்த ஷூட்டிங்கில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மைசூரிலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த “மேன்வர்சஸ் வைல்ட் ஷூட்டிங் டிஸ்கவரி சேனலில் பேர் கிரில்ஸுடன் நடந்தது. மைசூர் பந்திப்பூரில் ஷூட்டிங் நடந்தது. அதை முடித்துவிட்டு வருகிறேன். அதில் எனக்கு அடிப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.
அதெல்லாம் ஒன்றுமில்லை ஷூட்டிங் நடந்த இடத்தில் நிறைய முட்கள் இருந்தது அதில் சில குத்தியது அவ்வளவுதான்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.