மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
In கிாிக்கட் November 1, 2018 12:35 pm GMT 0 Comments 1469 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை 9 விக்கெட்க்கல் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது.
இந்திய மேற்கிந்திய தீவகள் அணிகளுக்கிடையிலான, ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) திருவானந்தபுரத்தில் நடைபெற்றது.
இந்த போட்டி இரு அணிக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அந்திய அணியின் பந்து வீச்சிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் 31.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்ளையும் இழந்து, 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில், ஹோல்டர் 25 ஓட்டங்களையும், சாமுவேல்ஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில், ஜடேஜா 4 விக்கட்டுக்களையும், பும்ரா, கலீல் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 105 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இந்திய அணி, 14.5 ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இலந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில், ரோஹித் சர்மா 63 ஓட்டங்களையும், அணித்தலைவர் விராட் கோஹ்லி 33 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி, 3-1 எனக் கைப்பற்றியது.
போட்டியின் நாயகனாக ரவீந்திர ஜடேஜாவும், தொடரின் நாயகனாக விராட் கோஹ்லியும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.