மேற்கிந்திய தீவுகள் அணி 224 ஓட்டங்களால் படுதோல்வி!
In கிாிக்கட் October 29, 2018 4:24 pm GMT 0 Comments 1430 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

இந்தியாவிற்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அந்தவகையில் களமிறங்கிய ரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) ஆகியோரின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் 378 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. அதில் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கி ஹேம்ராஜ் 14 ஓட்டங்களை எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் வெளியேறினார்.
அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார். 2-வது மற்றும் 3-வது போட்டியில் அச்சுறுத்திய ஷாய் ஹோப்பை ஸ்டன்னிங் அட்டமிழப்பில் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். அத்துடன் தொடக்க வீரர் பொவேலை விராட் ரன்அவுட் மூலம் வெளியேற்றினார்.
இதனால் 20 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு சாமுவேல்ஸ் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 25 ஓட்டங்கள் வரை தாக்குப்பிடித்தது. 45 ஓட்டங்களை எடுத்திருக்கும்போது ஹெட்மையர் எல்பிஎடபிள்யூ மூலம் கலீல் அஹமட் வீழ்த்தினார் .
இதன் பின்னர் பிரகாசிக்கத்த மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்களை இழந்து வெறும் 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் இந்தியா 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ், கலீல் அஹமது தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.