மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது
In இலங்கை January 21, 2021 2:41 am GMT 0 Comments 1567 by : Dhackshala

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சில் நேற்று இடம் பெற்ற விஷேட கலந்துரையாடலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள 907 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.