மேல் மாகாணத்தில் ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான வர்த்தமானி !
In இலங்கை December 27, 2020 4:09 am GMT 0 Comments 1644 by : Jeyachandran Vithushan

மேல் மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்புக்கான நடைமுறை குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகப் பரீட்சையை தொடர்ந்து புதிய நியமனங்கள் வழங்கப்படும் என மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் அனைத்து பாடங்களிலும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் அதிகம் உள்ளன என்றும் மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.