மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியத்தவறிய 550 பேரில் 14 பேருக்கு கொரோனா
In இலங்கை January 6, 2021 2:49 am GMT 0 Comments 1506 by : Dhackshala

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியத்தவறிய 550 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக அவர்களை பி.சி.ஆர். மற்றும் உடனடி அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, பொலிஸாரினால் 550 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுளளது.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்குமாறு சுகாதார பிரிவு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.
எனினும் சிலர் குறித்த ஆலோசனைகளை கடைப்பிடிக்காததால் அவ்வாறான நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.