மேல் மாகாணத்தை விட்டு எவரும் வெளியேற வேண்டாம்
In ஆசிரியர் தெரிவு December 19, 2020 7:39 am GMT 0 Comments 1992 by : Jeyachandran Vithushan

விடுமுறை நாட்களில் மேல் மாகாணத்தை விட்டு எவரும் வெளியேற வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பான வார இறுதி அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து பண்டிகை காலம் குறித்து ஒரு முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலங்களில் ஊரடங்கு உத்தரவு அல்லது தனிமைப்படுத்தல் உத்தரவுகளை விதிப்பது குறித்து அதிகாரிகள் இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு தேவை ஏற்பட்டால் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராணுவத் தளபதி கூறினார்.
மேலும் வைரஸ் பரவுவலை தடுப்பதற்கு அரசாங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.