மேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவு
In இலங்கை April 22, 2019 3:51 am GMT 0 Comments 2044 by : Yuganthini

மேல் மாகாண சபையின் அதிகார காலம் நிறைவடைந்துள்ளது. இதுவரை 7 மாகாண சபைகளின் அதிகாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் இந்த மாகாண சபையின் காலமும் நிறைவடைந்துள்ளது.
சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய, வடக்கு, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணம் ஆகியவற்றின் பதவிகாலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
மேலும் இந்த அனைத்து மாகாணங்களும் தற்போது ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
இதேவேளை ஊவா மாகாண சபையின் பதவி காலம், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்ததுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.