மே.தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கொலின் டி கிராண்ட்ஹோம் விலகியுள்ளார்.
34 வயதான துடுப்பாட்ட சகலதுறை வீரரான கொலின் டி கிராண்ட்ஹோம், வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இத்தொடரிலிருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக டேரில் மிட்செல் அணியில் சேர்க்கப்படுவார் என நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதேபோல, உபாதைக்குள்ளாகியுள்ள அஜாஸ் படேலிற்கு பதிலாக மிட்செல் சாண்ட்னர் பெயரிடப்பட்டுள்ளார்.
அத்துடன் திங்களன்று நடைபெறும் மூன்றாவது ரி-20 போட்டிக்கான அணித்தலைவராகவும் செயற்படுவார். மற்றும் நியூசிலாந்தின் எட்டாவது ரி-20 அணித்தலைவராக இருப்பார்.
நியூஸிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது.
இதில் முதலாவதாக நடைபெறும் ரி-20 தொடரின் முதல் போட்டி நாளை ஒக்லாந்து ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் திகதி ஹாமில்டனில் ஆரம்பமாகவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.