மைக்கல் கோவ்-உடனான சந்திப்பு ஏமாற்றம்: காலநிலை மாற்றத்திற்கான போராட்டக் குழு
In இங்கிலாந்து May 1, 2019 6:07 am GMT 0 Comments 2374 by : Risha

சுற்றாடல்துறை அமைச்சர் மைக்கல் கோவ்-உடனான சந்திப்பு ஏமாற்றமளித்துள்ளதாக, காலநிலை மாற்றத்திற்கு எதிராக அஹிம்சை வழியில் போராடிவரும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் தொடர்பாக அவசரநிலையை பிரகடனப்படுத்த மைக்கல் கோவ் மறுத்த நிலையிலேயே அவருடனான சந்திப்பு விமர்சிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் பத்து தினங்களாக காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவந்த குழுவினர் சுற்றாடல்துறை அமைச்சரை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தனர்.
இதனை தொடர்ந்து இளம் போராட்டக்காரர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தமது எதிர்காலம் பாதுகாப்பின்றி காணப்படுவதால் காலநிலை மாற்றத்திற்கு எதிரான கிளர்ச்சி போராட்டம் தொடரும் என எச்சரித்தார்.
சந்திப்பு குறித்து மைக்கல் கோவ் கூறுகையில், காலநிலை மாற்றத்தை சமாளிப்பது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே பல உயர்ந்த கருத்துக்கள் பகிரப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.