மைத்திரி – கோட்டா இணைவு சாத்தியமில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர்
In இலங்கை October 19, 2018 7:20 am GMT 0 Comments 1616 by : Yuganthini
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் போட்டியிடமாட்டாரென ஜனாதிபதியின் ஆலோசகர் ஷிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால அவ்வாறு செயற்படுவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன தொடர்பாக பொய்யான கற்பனை கதைகளே முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அதில் எந்ததொரு உண்மையும் இல்லையெனவும் ஷிரால் லக்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.