மைத்திரி புத்திசாதுரியமாக செயற்படுகின்றார் – மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்திசாதுரியமாக செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேகாலை சிறைச்சாலைக்கு இன்று(சனிக்கிழமை) பிற்பகல் சென்றிருந்தார்.
இதன்போது, நிவித்திகலயில் இன்று நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
”நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தி தவறிழைத்தேன். அவர் புத்திசாதுரியமாக செயற்படுகின்றார் என நினைக்கின்றேன்” என மஹிந்த இதன்போது பதிலளித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.