மொன்டே கார்லோ டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்தார் நடால்!

டென்னிஸ் உலகில் நூற்றாண்டுகள் பழமையான மொன்டே கார்லோ டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் வெற்றிபெற்றுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், ரபேல் நடால், ஆர்ஜென்டீனாவின் கைடோ பெல்லாவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே டை பிரேக் வரை நகர்ந்தது. இதில் இறுதி வரை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய நடால், 7-6 என செட்டைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஆக்ரோஷமாக விளையாடிய நடால், 6-3 என செட்டைக் கைப்பற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.