மொரிசன்ஸில் 3,000 முகாமையாளர்கள் நீக்கப்படவுள்ளனர்
In இங்கிலாந்து January 23, 2020 2:59 pm GMT 0 Comments 7630 by : S.K.Guna

மறுசீரமைப்பின் அங்கமாக மொரிசன்ஸில் 3,000 முகாமைத்துவப் பணியாளர்கள் பதவி நீக்கப்படவுள்ளனர்.
அதேவேளை மணித்தியால ஊதியம் பெறும் 7,000 புதிய வேலைவாய்ப்புகளை மொரிசன்ஸ் உருவாக்குகிறது.
இறைச்சி விற்பனை, பேக்கரி, கடலுணவு விற்பனை சம்பந்தமான பகுதிகளில் புதிய வேலைகள் இருக்கும் என மொரிசன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்படும் முகாமையாளர்கள் புதிய வேலைகளுக்கு செல்ல முடியும். அவர்கள் விரும்பினால் தொடர்ந்து மொரிசன்ஸில் வேறு வேலைகளில் ஈடுபட முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மொரிசன்ஸில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் முகாமைத்துவப் பணிகளில் இருப்பவர்கள் விற்பனைத் தளத்தில் வேலை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள முன்னணி 4 பல்பொருள் அங்காடிகள் கடுமையான போட்டிக்கு மத்தியில் சந்தையைத் தக்கவைத்துக்கொள்ள போராடுகின்றன. குறிப்பாக குறைந்த விலைப் பல்பொருள் அங்காடிகளான அல்டி மற்றும் லிட்ல் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றன.
இந்த வாரத் தொடக்கத்தில், செய்ன்ஸ்பரிஸ் நூற்றுக்கணக்கான முகாமைத்துவப் பதவிகளை நீக்குவதாகக் கூறியது. எனினும் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை.
2016 ஆம் ஆண்டில் ஆர்கோஸ் வணிகத்தை செய்ன்ஸ்பரிஸூடன் ஒருங்கிணைத்ததன் காரணமாகவே இந்தப் பதவிக் குறைப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இதேபோன்று ஆஸ்டாவிலும் பணியாளர் குறைப்புத் தொடர்பாக ஆலோசனைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த ஆண்டு பெப்ரவரியில் மொத்தம் 9,000 பணியாளர்கள் குறைக்கப்படுவர் என்று ரெஸ்கோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
நன்றி news.sky.com
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.