மோசடி குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – இலங்கை கிரிக்கட் சபை

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடி குறித்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரம் கொண்ட அதிகாரி கமல் பத்மசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
5.5 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வெளியில் வங்கிக் கணக்கு ஒன்றுக்கு மாற்றப்பட்டமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் தற்போது நிதிமோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் என்பவற்றால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விசாரணைகளில் இலங்கை கிரிக்கட் சபைக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபாலவுக்கு சொந்தமான நிறுவனமொன்றில் பணியாற்றிய நபரொருவர், இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிதிப்பிரிவில் சேவையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி டி சில்வா இதனைக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.