மோடியை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு அச்சம்: சந்திரபாபு நாயுடு
In இந்தியா November 4, 2018 4:33 am GMT 0 Comments 1418 by : Yuganthini

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தால் சிறைக்கு அனுப்பி விடுவாரென்ற அச்சத்தில் தான் நடிகர் பவன் கல்யாணும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் தன்னை விமர்சிப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ஓங்கோலிக்கு நேற்று (சனிக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“அரசியல், திரைக்கதை போன்றதல்ல என்பதை உணர்ந்து நடிகர் பவன் கல்யாண் செயற்பட வேண்டும்.
மேலும் பவன் கல்யாணுக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், மோடி என்றால் அச்சம். இதற்கு காரணம் அவர்களின் மீதுள்ள வழக்கும், கருப்பு பணமும் ஆகும்.
ஆகையால் பா.ஜ.க.வையோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியையோ விமர்சித்தால், அவர்களை சிறைக்கு அனுப்பி விடுவார் என்ற அச்சத்தில் தான் தொடர்ச்சியாக என்னை விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், நான் எந்தவித ஊழலும் செய்யாமல் மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றேன். இதனால் எனக்கு ஒருபோதும் அச்சம் இல்லை” என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.