மோடியை விமர்சித்த சசி தரூர் மீது அவதூறு வழக்கு!

மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர் என்று மோடியை விமர்சித்த முன்னாள் மந்திரி சசி தரூர் மீது டெல்லி பா.ஜக தலைவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெங்களூர் நகரில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது சசி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பத்திரிகையாளரிடம் கூறியபோது, “மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர். அந்த தேளை கையாலும் எடுத்தெறிய முடியாது, செருப்பால் அடித்து கொல்லவும் முடியாது” என உதாரணம் கூறியதாக சசி தரூர் கூறியிருந்தார்.
மேலும் சசி தரூரின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்ததுடன் சிவபக்தரான தனது மத உணர்வையும், கோடிக்கணக்கான சிவனடியார்களின் பக்தியையும் இழிவுப்படுத்தி விட்டதாக முன்னாள் மந்திரி சசி தரூர் மீது டெல்லி பா.ஜ.க. தலைவர் ராஜீவ் பபர் டெல்லி நீதிமன்றத்தில் இன்று(சனிக்கிழமை) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.