பொருளாதார வீழ்ச்சியை மறைக்க மோடி முயற்சி: ஒமர் அப்துல்லா
In இந்தியா May 5, 2019 2:50 am GMT 0 Comments 1846 by : Yuganthini

நாட்டின் பொருளாதாரம், வீழ்ச்சியடைந்துள்ளமையை மறைக்கவே ஏனைய விவகாரகங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிகமாக பேசுகின்றாரென தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஒமர் அப்துல்லா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் பிரச்சினையென அனைத்திலும் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
இந்த தோல்விகளை மறைப்பதற்காகவே புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் நடத்தப்பட்ட பதிலடி ஆகியவை குறித்து மோடி தேர்தல் பிரசாரங்களில் அதிகம் பேசுகின்றார்.
இவ்வாறு நாட்டின் உண்மை நிலவரத்தினை மறைத்து, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறும் முயற்சியிலேயே மோடி ஈடுபட்டுள்ளார்” என ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.