மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சியே இடம்பெறும்:சித்தராமையா
In இந்தியா April 20, 2019 3:20 am GMT 0 Comments 2038 by : Yuganthini

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால் ஜனநாயம் அழிந்து, சர்வாதிகார ஆட்சியே ஏற்படுமென முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
வடக்கு கர்நாடகம், பல்லாரியில் காங்கிரஸின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சித்தராமையா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“மோடி மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால் அரசியலமைப்பு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படும்.
மேலும் நாட்டில் பிற்படுத்தப்பட்ட தலித் மற்றும் பழங்குடியின மக்கள் நிம்மதியாக தற்போது இல்லை. பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
அந்தவகையில் நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மோடியை போல் பொய் பேசும் பிரதமரை கண்டதில்லை.
இதேவேளை 5 ஆண்டுகள் நான் செய்த பணிகள் குறித்த விவரங்களை வழங்க தயாராக இருக்கின்றேன். மோடி தனது பணிகள் குறித்து விவரங்களை வழங்க தயாராக இருக்கிறாரா” என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.