மோதலில் ஈடுபட்ட கொழும்பு பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல்
In இலங்கை January 11, 2020 10:39 am GMT 0 Comments 2043 by : Dhackshala

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கைது செய்யப்பட்ட 12 மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களை இன்று (சனிக்கிழமை) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குறித்த மோதல் தொடர்பாக கருவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.